0

(எஸ்பி.நாதன் & சுதர்சன்)

மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியில் உள்ள  வெட்டுக்காட்டில் இன்று வெள்ளிக்கிழமை (7) முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்பு தொழில் திணைக்களத்திற்து சென்று கொண்டிருந்த போது சாரதி வேகத்ததைக் கட்டப்படுத்த முடியாமல் அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மாங்சோலை வைத்தியசாலையில் சுத்திகரிப்பாளர்களாகப் பணிபுரியும் நிகாரா வயது (35) மற்றும் றிபாயா வயது ( 38) இருவரில் நிகாராவுக்கு காலிலி உடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சாரதியான நாகிவ் வயது (41) பலத்த காயமடைந்துள்ளதாகமற்றும் நிசான் வயது (12) காயமேற்பட்டு சிகிட்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.





Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top