0

(அன்பழகன் குரூஸ்) 

இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான மாணிக்கவாசகம் தயாபரன் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளராக இன்று தொடக்கம் பொறுப்புக்களைப் பாரமேற்றுக்கொண்டார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராகவும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும், மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண வறுமையொழிப்புத் திட்ட முகாமையாளராகவும், மட்டக்களப்பு காணி உதவி ஆணையாளர்  என பல திணைக்களகங்களில் சிறப்பாகப் பணியாற்றிய இவர் தற்போது குச்சவெளி பிரதேச செயலாளராகப் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

அபிவிருத்தி பற்றிய எண்ணக்கருவுடன் செயற்படும் இவர், குச்சவெளிப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் கணிசமான பங்காற்றுவார் எனப் பலரும் நம்புகின்றனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top