0

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா, சேவாக்கின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக், ஆமதாபாத், ஐதராபாத்தில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களிலும் மிக எளிதாக வெற்றிகளை குவித்த இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 3–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா–இலங்கை இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றையதினம் (13) வியாழக்கிழமை நடைபெற்றது. 

போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 404 ரன்கள் குவித்து, இலங்கை அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்திருந்தது.

இந்திய அணியில் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 151 பந்துகளில் 25 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் இரட்டை சதத்தை கடந்தார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் 209 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top