(பொன்முடி)
விதைகள் கங்குகள் வேர்விட்டுத் துளிர்விட்டு விருட்சங்களாகின்றன. செடிகள், கொடிகளெனப் படர்;கின்றன. வார்த்தைகள் வரிகளாய்ப் படர்ந்து கவிதைகளாகின்றன. இன்னும் பலவாக வடிவங்கள் கொண்டு ஒளிர்கின்றன.
விதைகள் கங்குகள் வேர்விட்டுத் துளிர்விட்டு விருட்சங்களாகின்றன. செடிகள், கொடிகளெனப் படர்;கின்றன. வார்த்தைகள் வரிகளாய்ப் படர்ந்து கவிதைகளாகின்றன. இன்னும் பலவாக வடிவங்கள் கொண்டு ஒளிர்கின்றன.
விதைகளும் வார்த்தைகளும் இணைந்ததாக வளர்கின்ற விருட்சங்கள், பாக்கள் 'விருட்சப்பா நடவு' ஆகியிருக்கின்றது.'
'விருட்சப்பா நடவு' என்பது மர நடுகையும் மேற்படி மரங்களின் சிறப்பம்சங்களைப் பாடல்களாகக் கட்டி பாடியாடி மகிழும் செயற்ப்;பாடாகவும் இணைந்ததாக அமைகின்றது.
'விருட்சப்பா நடவு' என்பது விதைகளின் இடுகையுடனும் மரங்கள் நடுகையுடனும் இணைந்து மரங்களின் சிறப்பம்சங்களைப் பாடலாகக் கட்டி பாடியாடும் செயற்பாடாக அமைகின்றது.
இது பலபரிமானங்களைக் கொண்ட எளிமையானதும் இலகுவானதுமான முன்னெடுப்பு. சிறுவர்களும், இளையவர்களும் மூத்தோர்களுடனும் சூழலுடனும் இணைகின்றதும், படைப்பாற்றலும், பங்களிப்பும், பொறுப்புணர்வும் கொண்டவர்களாக வளர்வதுமான சூழலையும் சூழ்நிலைகளையும் உருவாக்குவது 'விருட்சப்பா நடவு.'
சூழல்சார் அறிவையும், திறன்களையும் வளர்ப்பதோடு, சூழலை விளங்கி வாழும், வளரும், வளர்க்கும் நோக்கமுடையதாகவும் வடிவமைந்திருக்கிறது.
பொருத்தமான பசுமைச் சுழலை உருவாக்கும் போக்கில் அருந்தலானவற்றைத் தேடி வளர்த்தெடுத்தலிலும்: இருப்பவற்றின் சிறப்பறியாமையை அகற்றுவதிலும், 'விருட்சப்பா நடவு' கவனம் கொண்டுள்ளது.
இது உள்ளுர்ச் சுழல், சமூகங்கள், பண்பாடுகள், பொருளாதார நடவடிக்கைகள், உணவு முறைகள் என தன்னிறைவான சமூகங்களதும் : எல்லா உயிர்களதும் உலகினதும் வாழ்வுக்கும் வளர்ச்சிக்குமான உலகு தழுவிய முன்னெடுப்புகளுடன் இணைந்து கொள்கிறது.
இந்தவகையில் பூவரசின் முக்கியத்துவம் உணர்த்தும் பாடலொன்று இங்கு தரப்படுகின்றது. பூவரசு மர நிழல்களில் சிறுவர்களுடன் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் போது உருவாக்கம் பெற்று பாடப்பட்டு வரும் பாடல் இது.
இப்பாடலின் நிறைவு வடிவத்தைத் தந்திருக்கின்றார் மூன்றாது கண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாடுகளுக்கான நண்பர்களின் குழுவின் ரா.தனுஜா.
இப்பாடல் இன்னும் பலபல இடங்களில் பலபல வடிவங்கள் பெற்று பரவும். அர்த்தங்கள், அனுபவங்கள் கொண்டு விரியும். மனங்களில் நிறையும் நினைவுகளில் பதியும்.
பூவரசின் மதிப்பும் மாண்பும் மனங்களிலும் நிலங்களில் வளர்ந்து விருட்சங்களாகும்.
குப்பைமேனியும் குப்பைக் கீரையும் பெறுமதி கண்டு விருட்சங்களாகி புத்தியில் விரியும், நினைவில் பதியும்.
பூவரசு
சின்னச் சிறிய சிறுவர்கள் நாம்
சேர்ந்து விளையாட ஓடிவந்தோம்
சேர்ந்து வந்து நாங்கள் நிற்கையிலே
பூவரசு மரம் ஒன்றைக் கண்டோம்
எங்கள் வீதியதன் ஓரத்திலே
நிழலாய் அங்கு நித்தம் நிற்கும் மரம்
நண்பர் போல என்றும் எங்களுக்கு
நலன்கள் பல தரும் நல்ல மரம்
அகன்று விரிந்த அதன் இலையில்
அழகாய் குழலும் நாம் செய்திடுவோம்
செய்த குழலில் நாம் பீ... பீ... என்றே
இன்னிசை கீதங்கள் பாடிடுவோம்
மகிழ்வுடனே அந்த மரம் மீது
மஞ்சள் சிவப்பென பூத்திருக்கும்
வண்ண மலர்களைக் கொய்து நாங்கள்
பொம்மைகள் செய்து விளையாடிடுவோம்
பச்சை நிறத்தன் காயதனை
பறிக்காமல் நாங்களும் காயவிட்டு
காய்ந்ததுமே அதனைப் பறித்து
பம்பரம் செய்து சுழற்றிடுவோம்
கூடிடுவோம் நாம் கூடிடுவோம்
பூவரச மர நிழல் தனிலே
கூடியதனது பயன் தன்னைப்பாடி
இங்கே நாமும் ஆடிடுவோம்
சி.ஜெயசங்கர்
Post a Comment