0
மாநகர சபை வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட அதிவிசேட விருது 2013 எனும் தரக் கணக்கீட்டுப் போட்டியில் உள்ளூராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், அமைச்சுக்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தெரிவுகளுக்கமைவாக மட்டக்களப்பு மாநகர சபையானது உள்ளூராட்சி மன்றங்களில் கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.




உள்ளூராட்சி மன்றங்களினால் நிறைவேற்றப்படும் பணிகளின் தொகுப்பாகவும் திறம்பட செயலாற்றிய மன்றங்களை வெளிக்கொணரும் நிகழ்வாக அமைந்த இந்தப் போட்டியில் கிழக்கு மாகாணத்தின் கீழ் செயற்படும் 30 இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் போட்டியில் பங்குபற்றின. இவற்றுள் சிறந்த உள்ளூராட்சி மன்றமாக மட்டக்களப்பு மாநகர சபை தெரிவு செய்யப்பட்டது வரலாற்று நிகழ்வாகும்.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் அலுவலகர்கள், ஊழியர்களின் திறமையான செயற்பாட்டிற்கு ஒரு மணிமகுடமாக இவ்விருது காணப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாபெரும் பரிசளிப்பு நிகழ்வானது கடந்த 05.09.2014 அன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தக் கல்லூரி மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம அவர்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஜீப் அப்துல் மஜீத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் முதலாம் இடத்திற்குரிய விருதினையும் சான்றிதழையும் கௌரவ முதலமைச்சிரிடமிருந்து பெற்றுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கால்நடை வைத்திய அதிகாரி, கணக்காளர் நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலர்களும் கலந்துகொண்டனர் மாநகர ஆணையாளரின் சிறந்த தலைமைத்துவத்திற்கும் வழிகாட்டலுக்கும் கிடைக்கப் பெற்ற இவ்விருதிற்கு முழு மாநகரசபையும் மகிழ்ச்சியடைவதுடன் அவருக்கு மனப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top